நாமக்கல்,
72 ஆவது சுதந்திரதினத்தையொட்டி நாமக்கலில் விடியலை நோக்கி இந்தியா என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் மற்றும் கலைவிழா நடைபெற்றது.

இந்திய தொழிற்சங்கமையம் (சிஐடியு) சார்பில் 72 ஆவது சுதந்திரதினத்தையொட்டி விடியலை நோக்கி இந்தியா என்ற சிறப்பு கருத்தரங்கம் மற்றும் கலைவிழா நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சிங்காரம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் எம்.அசோகன் வரவேற்றார். இக்கருத்தரங்கில் நமக்கான விடியல் என்ற தலைப்பில் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முருகேசன், பொதுத்துறையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் தொலைத்தொடர்பு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.தமிழ்மணி ஆகியோர் கருத்துரையாற்றினர்.

மேலும், மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத கொள்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ந.வேலுசாமி கருத்துரையாற்றினார். முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி வாழ்த்துரை வழங்கினார். இதில் சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஏ.கே.சந்திரசேகரன், மாவட்ட துணைத்தலைவர் எல்.ஜெயக்கொடி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக துணைத் தலைவர் கு.சிவராஜ் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.