திருப்பூர்,
திருப்பூர், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழாவும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் துணை அமைப்பான “டீ ஃ பவுண்டேசன்” மூலம் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட 48 கழிவறைகள் பள்ளிக்கு ஒப்படைக்கும் விழாவும் நடத்தப்பட்டது. பள்ளியின் முதல்வர் சு.ரோசி வரவேற்றார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவரும் டீ பவுண்டேசன் தலைவர் ராஜா எம்.சண்முகம் தேசிய கொடியேற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனைவர் லிங்க்ஸ் சவுகத் அலி, துணை தலைவர் சேக்தாவுத், இணை செயலாளர் சந்திரகாந்த், மஞ்சு எஸ்.சுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு சுதந்திர தின விழா உரையாற்றினர். இறுதியில் உதவி தலைமை ஆசிரியர் குழந்தைசாமி நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.