திருப்பூர்,
எல்லா அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் வகுப்புக்கு ஒர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் நியமிக்க வழி செய்யும் விதத்தில், கல்வி உரிமைச் சட்டம் 2009 இல் பள்ளிகளுக்கான அடிப்படைத் தரங்கள் பற்றிய அட்டவணையில் திருத்தம் கொண்டுவருமாறு கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பழையகோட்டை ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானித்தில் வலியுறுத்தப்பட்டது.மேலும், பழையகோட்டைப் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவும், புதிதாக சத்துணவுக் கூடம் கட்டித் தரவும், பள்ளியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள குட்டப்பாளையம், நல்லம்மாள்புரம், காமராஜ்நகர், அர்ச்சுணாபுரம், வெங்கரையாம்பாளையம், பெரிய காட்டுத்தோட்டம், குடிமங்கலம், சின்னம்மன் நகர், ஊஞ்சமரம் ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு அரசுப் பேருந்து அல்லது சிற்றுந்து வசதி செய்து கொடுக்கவும், அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டித் திட்டத்தை உடனே தமிழக அரசு நடைமுறைப்படுத்தவும், அரசுப் பள்ளியில் மழலையர் வகுப்புகள் தொடங்க அனுமதி அளித்து ஆசிரியர் நியமனம் செய்யவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: