திருப்பூர்,
நீதித்துறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாததைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அருகில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீதித்துறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப் படாததைக் கண்டித்தும் நீதித்துறையில் இட ஒதுக்கீட்டுக்கு சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தியும் திராவிடர் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் இரா.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் யாழ்.ஆறுச்சாமி வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் வீ.சிவசாமி, திருப்பூர் மாநகரத் தலைவர் இல.பாலகிருஷ்ணன், செயலாளர் பா.மா.கருணாகரன்,கோவை மண்டல இளைஞரணிச் செயலாளர் ச.மணிகண்டன், மாவட்ட மாணவரணித் தலைவர் கு.திலீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோபி வெ.குமாரராஜா கண்டன உரையாற்றினார். இதில் நீதித்துறையில் இட ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். நிறைவாக திருப்பூர் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ.குருவிஜயகாந்த் நன்றி கூறினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: