திருப்பூர்,
திருப்பூர் ஆத்துப்பாளையம் சாலையில் சிஐடியு சார்பில் ‘விடியலை நோக்கி’ என்ற தலைப்பில் கலை இரவு நடத்தப்பட்டது.

இதற்கு சிஐடியு பாத்திரத்தொழிலாளர் சங்க செயலாளர் கே.குப்புசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் கே. ரங்கராஜ் துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் டி.குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கொட்டும் மழையிலும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இதில் விடுதலை இந்தியா விடியலை நோக்கி செல்கிறதா? என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. இதில் தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் நடுவராக இருந்தார். விடியலை நோக்கி செல்கிறது என்ற தலைப்பில் கவிஞர் முத்துநிலவன் பேசினார். அவர் பேசியதை மறுத்து பேராசிரியர் சுந்தரவள்ளி பேசினார். அதைத்தொடர்ந்து திருப்பூர் கலைக்குழுவின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் உடுமலை துரையரசனின்பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.