சென்னை,

சென்னை பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பாரதிய ஜனதா கட்சியின் முதுபெரும் தலைவரும், முன்னாள் பாரதப் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் மறைவையொட்டி, இன்று (17.08.2018) சென்னை, தி.நகர், வைத்தியராம் தெருவில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஏ. பெருமாள், வெ. ராஜசேகரன் மற்றும் டி.கே. ராஜன் ஆகியோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: