திருப்பூர்,
கேரளா மாநிலத்தில் வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்வதற்கு வியாழனன்று திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடைவீதிகளில் நிதி வசூல் இயக்கத்தில் ஈடுபட்டனர்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து தவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல் கனமழைக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்நிலையில் கேரள மாநில அரசும் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளும் அம்மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்து வருகிறது. மத்திய அரசிடம் சுமார் ரூ.8 ஆயிரம் கோடி தேவை என கோரிக்கையும் வைத்தனர். ஆனால் மத்திய அரசு வெறும் ரூ. 100 கோடியை அறிவித்து கேரள அரசை வஞ்சித்துள்ளது. இந்நிலையில் கேரள அரசு வீடுகளை இழந்த மக்களுக்கு ரூ. 10 லட்சம் மற்றும் உயிரிழந்த வர்களுக்கு ரூ.4 லட்சம் என அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் பல பகுதிகளிலிருந்து கேரளா மாநிலத்திற்கு நிதி அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.இதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ராக்கியாபாளையம் பகுதியில் நிதிவசூல் இயக்கத்தில் ஈடுபட்டனர். ராக்கியாபாளையம் கடைவீதியில் துவங்கி பல்லக்கவுண்டன்பாளையம், நல்லூர், முத்தனம்பாளையம் சாலை ஆகிய பகுதிகளில் நிதிவசூல் இயக்கத்தில் ஈடுபட்டனர். இதில் ரூ.9,500 வசூலிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் என்.சுப்பிரமணியம், தெற்கு ஒன்றிய குழு உறுப்பினர், சி.சுப்பிரமணியம், வாலிபர் சங்க தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.

கருவம்பாளையம்;
இதேபோல் கருவம்பாளையம் பகுதியில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நிதிவசூல் இயக்கத்தில் ஈடுபட்டனர். இதில் கருவம்பாளையம், மங்கலம் சாலை ஆகிய பகுதிகளில் வசூல் இயக்கத்தில் ஈடுபட்டனர். இதில் ஒரு மணி நேரத்தில் ரூ. 10,440 வசூலித்தனர்.இந்த வசூல் இயக்கத்தில் தெற்கு மாநகரக் குழு உறுப்பினர்கள் பாலன், ஈஸ்வரமூர்த்தி வாலிபர் சங்க தெற்கு மாநகர செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: