தூத்துக்குடி;
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அளிக்கப்பட்டன.

கன மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நமது அண்டை மாநிலமான கேரளமக்களுக்கு உதவிடும் வகையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின் பேரில்,  நிவாரணப்பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. கேரள மக்களுக்காக தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு பகுதிகளில் நிவாரண பொருட் கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தூத்துக்குடி ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் நிறுவனம் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பி
லான அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் கேரள மக்களுக்காக அளிக்கப்பட்டுள்ளன. இதில்,
குழந்தைகளுக்கு தேவையான பால்பவுடர்,  டெட்டால், கிருமி நாசினி போன்ற பொருட்களை ஸ்பிக் முழுநேர இயக்குநர் எஸ்.ஆர். ராமகிருஷ்ணன்,  நிர்வாகத் தலைவர் கோபாலகிருஷ்ணன், நிர்வாக மேலாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள் மாநக ராட்சி நிர்வாகத்திடம் வழங்கினர்.

Leave A Reply

%d bloggers like this: