சென்னை:
கேரளாவில் கனமழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்துக்கு பல்வேறு மாநில அரசுகளும் கட்சியினரும் அமைப்பினரும் திரைக்கலைஞர்களும் நிதியுதவிகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சூர்யா, கார்த்தி சார்பில் கேரள வெள்ள நிவாரண நிதிக்காக 25 லட்சம் ரூபாயை  கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நடிகர் கார்த்தி வழங்கினார்.நடிகர் விஜய் சேதுபதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: