இஸ்லாமாபாத்:                                                                                                                                                                       இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போல பாகிஸ்தானில் பிஎஸ்எல் என அழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி-20 தொடர் நடைபெற்று வருகிறது.

கடந்த வருடம் (2017) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பிசிஎல் சீசனில் சூதாட்ட புகார் எழுந்தது.சூதாட்டம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவு இணைந்து துரித விசாரணை மேற்கொண்டது. விசாரணை முடிவில் ஷர்ஜீல் கான், காலித் லடீஃப், நசீர் ஜாம்ஷெட் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் அடங்கிய அறிக்கை தயார் செய்யப்பட்டன. இந்த சூதாட்ட வீரர்களில் நசீர் ஜாம்ஷெட்டுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இடைக்காலத் தடை விதித்து,இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு எதிராக ஆதாரங்களை ஒன்று திரட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஷர்ஜீல் கான், காலித் லத்தீப், நசீர் ஜாம்ஷெட் மீது முறையான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று தெரிவித்திருந்தது.

ஆனால், நசீர் ஜாம்ஷெட் மட்டும் விரைவாக தன் மீதான குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.இந்நிலையில், நசீர் ஜாம்ஷெட் மீதான புகார் உறுதி செய்யப்பட்டதாகக் கூறி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு 10 வருட தடையை விதித்துள்ளது. பாகிஸ்தான் தேசிய அணியில் இடம் பிடித்திருப்பதால் அவருக்கு மட்டும் விரைவில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷர்ஜீல் கான், காலித் லடீஃப் ஆகியோர் தற்போது தேசிய அணியில் இல்லை என்பதால் இருவருக்கும் இன்னும் தண்டனை அறிவிக்கப்படவில்லை.இருப்பினும் இந்த இருவருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

                                                                    ஷர்ஜீல் கான்                                                                           இதில் ஷர்ஜீல் கான் பாகிஸ்தான் அணிக்காக ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடிஇருந்தாலும் தற்போது ஆடும் லெவனில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.