லக்னோ:
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் அனைத்து நடவடிக்கைகளும் மதவெறிமயமாக்கப்பட்டு வருகின்றன. பெண்கள், தலித்துக்கள், சிறுபான்மையினர், ருக்கு எதிராக வெறுப்பு பரப்பப்பட்டு வருகிறது. தீண்டாமைக் கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகள், மாட்டிறைச்சி வைத்திருப்பவர்கள் மீதான தாக்குதல் என உத்தரப்பிரதேசத்தில் அராஜகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில், புதிதாக ‘இந்து நீதிமன்றம்’ என்ற அமைப்புமுறையை, அகில பாரதிய இந்து மகாசபை, உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் துவங்கியுள்ளது. இந்துக்கள் தங்களுக்கு உள்ளான பிரச்சனைகளை இந்த நீதிமன்றத்தை அணுகி தீர்த்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ள இந்து மகா சபை, இதன் முதல் நீதிபதி என்று பூஜா ஷகுன் பாண்டே என்பவரை நியமித்துள்ளது.
இஸ்லாமியர்களுக்கு இருக்கும் ஷரியத் சட்டத்தைப் போல, இந்துக்களுக்கென்று இந்த நீதிமன்றத்தைத் துவங்கி இருப்பதாகவும், இந்துப் பெண்கள், இந்துத் திருமணம், சொத்து மற்றும் பணம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி ‘இந்து நீதிமன்றம்’ தீர்ப்பு வழங்கும் என்றும் இந்து மகா சபையின் செயலாளர் பண்டின் அசோக் சர்மா என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை முதல் அதிகபட்சமாக தூக்குத் தண்டனை வரை இந்த நீதிமன்றம் வழங்கும் என்றும் அதிர்ச்சி அளித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.