திஸ்பூர்;
அசாமில் பசு குண்டர்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலம் பிஸ்வந்த் மாவட்டத்தில், சங்கட் டண்டி என்பவருக்கு சொந்தமான 2 மாடுகளை, 4 பேர் வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் பசுக்களை கடத்துவதாக கூறி, ஊர்மக்களைத் திரட்டிய பசு குண்டர்கள், வாகனத்தை மறித்து, அதிலிருந்த 4 பேரையும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் திபென் ராஜ்போங்ஸ்கி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, புஜன் காடோவர், புல்சந்த் சாஹூ, பிஜோய் நாயக் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அப்போதும் விடாமல் பசு குண்டர்கள் வெறித்தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர். போலீசார் வந்த பின்னரே தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.

அடித்துக் கொல்லப்பட்ட திபென் ராஜ்போங்ஸ்கி உடலை மீட்ட போலீசார், காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இதுபுறமிருக்க, கும்பல் தாக்குதல் என்று வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தாக்குதலுக்கு உள்ளான 4 பேர் மீதும், பசுக்களை கடத்தியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: