மும்பை;
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு அளவில் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. ஏற்கெனவே, ‘ஒரு டாலருக்கு 70 ரூபாய்’ என்று சரிவைச் சந்தித்துள்ள இந்திய ரூபாயின் மதிப்பு, வியாழனன்று மேலும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.ஞாயிற்றுக்கிழமையன்று காலை 68 ரூபாய் 84 காசுகளாக சரிந்த ரூபாய் மதிப்பு, திங்கட்கிழமையன்று 69 ரூபாய் 62 காசுகளுக்கு சென்றது. செவ்வாய்க்கிழமையன்று 70 ரூபாய் 08 காசுகளாக, வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்நிலையில், வியாழக்கிழமையன்று வர்த்தக நேர துவக்கத்தில் மேலும் மதிப்பு குறைந்து, டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு 70 ரூபாய் 32 காசுகள் என்ற மோசமான நிலையை அடைந்தது.

ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், போதிய அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளதாகவும், அஞ்ச வேண்டியதில்லை என்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி சமாளித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.