சென்னை,
சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை முறையில் 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து பயணிகளின் வசதிக்காக உள்நாட்டு வருகை மற்றும் வெளியே செல்லும் இடத்தில் பரிசோதனை முறையில் 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ரோபோக்களிடம் விமானங்கள் செல்லும் நேரம் மற்றும் விமான நிலையத்தில் உள்ள வசதிகள், அருகில் உள்ள சுற்றுலாத் தளம் போன் றவிவரங்களை ஆங்கில உரையாடல் மூலம் கேட்டுப் பெறமுடியும். தற்பேதைக்கு மூன்று மாதங்கள் வரை சோதனை அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரோபோக்கள் வெற்றிகரமாக செயல்பட்டால் நிரந்தரமாக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: