புதுதில்லி;
முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் உடல் நலக் குறைவால் ஆகஸ்ட் 16 வியாழனன்று மாலை காலமானார். அவருக்கு வயது 93. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களாக வாஜ்பாய் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்தியப்பிரதேச மாநிலம் குவாலி யரில் 1924ஆம் ஆண்டில் பிறந்த வாஜ்பாய், அரசியல் அறிவியலில் எம்.ஏ பட்டம் பெற்றவர். திருமணம் செய்யாமல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழு நேர பிரச்சாரகராக இருந்தவர்.

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் மாநிலங்களவை உறுப்பின ராகவும் இருந்து பணியாற்றியவர். 1968-ஆம் ஆண்டு ஜனசங்கத்தின் தலைவராக இருந்து செயல்பட்டவர். அவசர நிலை காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மொரார்ஜி தேசாய் தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.
1996 ஆம் ஆண்டில் முதல் முறையாக பிரதமர் பொறுப்பேற்று 13 நாட்களும் 1998
ஆம் ஆண்டில் பதவியேற்று 13 மாதங்களும் ஆட்சி நடத்தினார். 1999-ஆம் ஆண்டில் 3 ஆவது முறையாக பிரதமரான வாஜ்பாய் 5 ஆண்டுகள் பதவி வகித்தார். 2005-ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற்றார்.

வாஜ்பாய் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், எய்ம்ஸ் மருத்துவ மனையில் இருந்து வாஜ்பாய் உடல் அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த முதல்வர் எடப்பாடிபழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் வெள்ளியன்று தில்லி செல் கின்றனர்.

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு இரங்கல்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறை வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. வாஜ்பாய் அவர்கள், நாடாளுமன்ற அரசியல் பணியிலும், அரசாங்கத்திலும் இந்திய பிரதமராகவும் குறிப்பிடத் தக்க விதத்தில் செயலாற்றியவர்; ஒரு அரசியல் தலைவர் என்ற முறையில்  அனைத்து பிரிவு மக்களால் மதிக்கப்பட்ட வர் என கட்சியின் அரசியல் தலைமைக்குழு இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.