போபால்,
மத்திய பிரதேச மாநிலம் சுல்தான் கர் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் அருகே உள்ள சுல்தான் கர் நீர்வீழ்ச்சியில் புதனன்று சுற்றுலா பயணிகள் குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமான திடீரென ஏற்பட்ட வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய 40-க்கும் மேற்பட்டோர் நீர் வழித்தடத்தில் இருந்த பாறைகளின் மீதும் மரங்களின் ,மீதும் நின்று கொண்டு தப்பினர்.

ஆனால், ஆற்றில் தொடர்ந்து நீரின் அளவு அதிகரித்ததால் அவர்களால் அங்கிருந்து தப்ப முடியாமல் தவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் விடிய விடிய நீடித்த மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆற்றில் தத்தளித்த 45 பேர் ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: