சென்னை:
போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் கூட்டுறவு சங்கத் தேர்தல் ரத்து செய்யப்
பட்டிருப்பதை சிஐடியு மாநில தலைவர் அ. சவுந்தரராசன் வன்மையாக கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் லிட் (x367) என்கிற கூட்டுறவு சொசைட்டியின் தேர்தல் 16.8.2018 அன்று நடக்க
வேண்டும் என்பது சென்னை உயர்நீதிமன்ற வழக்கின் பொதுத் தீர்ப்பின் வழிகாட்டலாகும். அதன்படி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடு களும் செய்து முடிக்கப்பட்ட நிலையில் 15.8.2018 இரவு திடீரென சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகள் காரணமாக தேர்தல் ரத்து செய்யப் படுகிறது என்று மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ஆணையிட்டுள்ளார்.

இந்த கூட்டுறவு சொசைட்டியில் கடந்த முறை பொறுப்பில் இருந்த அண்ணா தொழிற்
சங்கத்தினர் பெரும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைக்கு உள்ளானார்கள்.

இந்த முறையும் கடந்த முறையைப் போலவே வேறு யாரும் வேட்பு மனுவே
தாக்கல் செய்யவிடாமல் செய்யும் முயற்சி யில் இறங்கி ஏடிபி சங்கம் வெற்றி பெற முடிய
வில்லை. இப்போது மொத்தம் 13 இயக்கு நர்களை தேர்ந்தெடுப்பதற்கு 32 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு பட்டியலை தேர்தல் அதிகாரி அறிவித்துவிட்டார். இந்த நிலையில் தேர்தல் நின்று போனது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பல வழக்குகள் மொத்தமாக விசாரிக் கப்பட்டு இந்த கூட்டுறவு சொசைட்டிக்கு 16.8.2018 அன்று தேர்தல் நடத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

கூட்டுறவு தேர்தல் ஆணையர் தேர்த லுக்கான எல்லா ஏற்பாடுகளையும் முறைப்படி செய்துவிட்டார். மாநிலம் முழுவதும் மொத்தம் 43 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குச்சீட்டு, வாக்குப்பெட்டி, தேர்தல் நடத்தும் ஊழியர்கள் போன்ற எல்லாம் 15.8.2018 அன்று போய் சேர்ந்துவிட்டது.

சுதந்திரமான நியாயமான தேர்தல் நடந்தால் வெற்றிபெற முடியாது என்பதால்
அண்ணா தொழிற்சங்கத்தினர் தேர்தல் அதிகாரிகளையும், கூட்டுறவுத் துறை அதிகாரிகளையும் ஆட்சியையும் பயன்படுத்தி தேர்தலை நிறுத்தி விட முறையிட்டனர். அவர்கள் எந்த தேர்தல் பிரச்சாரமும் செய்யவில்லை.

ஆளுங்கட்சி சங்கத்தினரின் தவறான எண்ணத்திற்கும் வேண்டுகோளுக்கும் ஏற்ப இந்தத் தேர்தலை கடைசி நிமிடத்தில் ரத்து செய்து கொடிய ஜனநாயகப் படுகொலையை செய்துள்ளனர்.

காவல்துறை எதற்கு இருக்கிறது?
தேர்தலை நடத்தினால் கடுமையான சட்டம் – ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என்பதால்
தேர்தலை ஒத்தி வைக்குமாறு காவல்நிலை யங்களில் இருந்து கடிதம் பெறப்பட்டு இந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதுதான் இதில் மிகவும் கேவலமான விஷயமாகும்.
சட்டம் – ஒழுங்கிற்கு கேடு விளைவிப்போரை தடுப்பதற்குத்தானே காவல்துறை இருக்கிறது. ஆனால் காவல்துறை தனது பொறுப்பிற்கு எதிர்மறையாக அயோக்கியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது. காவல்துறை தனக்கு கையாலாகாது என்று கூறி ஒரு தேர்தல் நின்று போனால் அங்கே சட்டத்தின் ஆட்சி இருப்பதாகவோ, ஜனநாயகம் இருப்பதாகவோ கூற முடியுமா?

தேர்தல் தயாரிப்புகளில் கூட்டுறவு சொசைட்டிக்கு இதுவரை சுமார் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகிவிட்டது. இது அவ்வளவும் அன்றாடம் உழைத்து சேமிக்கும் தொழிலாளியின் பணம்.
எனவே தமிழக முதல்வரும், காவல்துறை இயக்குநரும் இந்த கூட்டுறவு சங்கத்தின் தேர்தலை உடனே நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். காவல்துறை நேர்மையாக நடந்து
கொள்ள வேண்டும். தேர்தல் முறையாக நடை
பெற உரிய பாதுகாப்புத் தர வேண்டும்.

இப்போது விரயமான சொசைட்டியின் பணத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும். தேர்தல் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து தொடங்கி நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.