சேலம்,
பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவுகட்டிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்த பாலியல் வன்முறைகளை தடுத்திடும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மிக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி சுதந்திர தினமான புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மனித சங்கிலி இயக்கத்திற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, டி.உதயகுமார், எம்.சேதுமாதவன், ஆர்.குழந்தைவேல், ஏ.ராமமூர்த்தி, ஆர்.தர்மலிங்கம், மேற்கு மாநகரச் செயலாளர் எம்.கனகராஜ், கிழக்கு மாநகர செயலாளர் பி.ரமணி, வடக்கு மாநகரக் குழு உறுப்பினர் எம்.முருகேசன், சேலம் தாலுகாசெயலாளர் சுந்தரம், ஓமலூர் பொறுப்புசெயலாளர் ஈஸ்வரன், பனமரத்துப்பட்டி செயலாளர் சுரேஷ், ஏற்காடு செயலாளர் நேரு உள்ளிட்ட மாவட்டக் குழு, இடைக்குழு உறுப்பினர்கள் உட்பட எண்ணற்றோர் பங்கேற்றனர்.

ஆத்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மனித சங்கிலி இயக்கத்திற்கு ஆத்தூர் தாலுகா செயலாளர் ஏ.முருகேசன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜோதிகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஜலகண்டாபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் கே.ராஜாத்தி தலைமை தாங்கினார். இதில் நங்கவள்ளி செயலாளர் வெங்கடேஷ், எடப்பாடி செயலாளர் பெரியண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேட்டூர் குஞ்சாண்டியூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மேட்டூர் தாலுகா செயலாளர் வசந்தி தலைமை தாங்கினார். இதில் மேச்சேரி தாலுகா செயலாளர் மணிமுத்து, சி.கருப்பண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இளம்பிள்ளை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கே.வெங்கடாச்சலம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.சேகர், மாவட்ட குழு உறுப்பினர் என்.ஜெயலட்சுமி, சேகரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஈரோடு:
ஈரோடு மாவட்டம், நசியனூர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற மனித சங்கிலி இயக்கத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் பி.லலிதா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாவட்டக் குழு உறுப்பினர் ராஜா, லுகா செயலாளர் எம்.நாச்சிமுத்து, மாதர் சங்கத்தின் தாலுகா செயலாளர் என்.கலாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

பெருந்துறை பழைய பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற மனித சங்கிலி இயக்கத்திற்கு தாலுகா செயலாளர் குப்புசாமி தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் கே.ரவிமற்றும் தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கோபி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மனிதச் சங்கிலி இயக்கத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முனுசாமி தலைமை தாங்கினார். இதில் கோபி தாலுகா செயலாளர்கெம்பராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் வி.ஆர்.மாணிக்கம் உட்பட பலர்பங்கேற்றனர்.கொடுமுடி சிவகிரி கடைவீதி பகுதியில் நடைபெற்ற மனிதச் சங்கிலி இயக்கத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் கே.சண்முகவள்ளி தலைமைவகித்தார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். சத்தியமங்கலம் பகுதியில் நடைபெற்ற மனித சங்கிலி இயக்கத்திற்கு தாலுகா செயலாளர்விஜயகுமார் தலைமை தாங்கினார்.

இதேபோல் மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளில்நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்:
நாமக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மனித சங்கிலி இயக்கத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரங்கசாமி, பெருமாள், அசோகன், வேலுசாமி, ஜெயமணி, சுரேஷ் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.