தேனி;
முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பெரியாறு அணை வரலாற்றில் முதல் முறையாக அணைக்கு நீர்வரத்து வியாழனன்று காலை 25 ஆயிரத்து 733 கன அடியாக அதிகரித்தது. இதனால் பெரி யாறு அணையிலிருந்து 13 மதகுகள் வழியாக இடுக்கி அணைக்கு வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் 2014 நவம்பர் 21, 2015 டிசம்பர் 7 என இருமுறை அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. பருவ மழை ஏமாற்றியதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீர்மட்டம் 136 அடிகூட எட்டவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெரியாறு நீர்பிடிப்பு
பகுதியில் பெய்து வரும் தொடர்மழை  காரணமாக மூன்றாம் முறையாக அணையின் நீர்மட்டம் புதனன்று 142 அடியை தாண்டியது.

அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக நிலைநிறுத்த, பெரியாறு அணையின் 13 மதகுகளும் 10 அடி உயரத்திற்கு உயர்த்தப்பட்டு இடுக்கி அணைக்கு வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியும், தமிழகப்பகுதிக்கு சுமார் 3 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறக்கப்பட் டுள்ளது.வியாழனன்று மாலை நிலவரப் படி, 152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் 141.95 அடியாக
இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 25733 கனஅடியாக இருந்தது. அணையின் இருப்புநீர் 7720 மில்லியன் கனஅடியாக உள்ளது.

வைகையின் நீர்மட்டம் 63.75 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3666 கனஅடியாகவும், அணையி லிருந்து வினாடிக்கு 60 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 4357 மில்லியன் கனஅடி யாக உள்ளது. வியாழனன்று இரவுக்குள் அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டும் என்றும் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 117.42 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 கனஅடியாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 3 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 85.60 மில்லியன் கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.95 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினா
டிக்கு 2 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 10 கனஅடி யாகவும் இருந்தது. அணையின் இருப்புநீர் 210.06 மில்லியன் கனஅடி யாக உள்ளது. பெரியாறு 122.8 மி.மீ,
தேக்கடி 110 மி.மீ, கூடலூர் 52.4 மி.மீ, பாளையம் 20 மி.மீ வீரபாண்டி 36 மி,மீ மழை பதிவாகி இருந்தது.

Leave A Reply

%d bloggers like this: