மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தமிழகம் முழுவதும் வியாழனன்று (ஆக.16) தொடங்கியுள்ளது. இந்த இயக்கம் இந்த மாத இறுதிவரை நடைபெறுகிறது. இந்த சந்தா சேர்ப்பு இயக்கம் மதுரை மாவட்டத்தில் முழு வீச்சில் நடைபெறுகிறது. திட்டமிட்ட எண்ணிக்கையை பெற்றுத்தருவோம் என்ற நம்பிக்கையையும் கட்சி அணிகள் தெரிவித்துள்ளன.

மதுரை எச்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் ஜி.என்.வெங்கடசாமி. மதுரை கார்க்கி படிப்பக உறுப்பினர். இவர் கடந்த ஜூலை 23-ஆம் தேதி முதல் தீக்கதிர் விற்கும் பணியைத் தொடங்கியுள்ளார். தினம்தோறும் 50 தீக்கதிரை வாங்கிக்கொள்ளும் அவர், காலை ஆறு மணிக்கு தனது விநியோகத்தை தொடங்குகிறார். பத்து பத்திரிகைகளை சுற்றுவட்டாரத்தில் உள்ள கடைகளில் விநியோகம் செய்கிறார்.

எஞ்சியுள்ள நாற்பது பிரதிகளை எடுத்துக்கொண்டு மதுரை அரசரடியில் உள்ள தபால் நிலையத்திற்குச் காலை 9.30 மணிக்குச் சென்றுவிடுகிறார். தபால் நிலையத்திற்கு வெளியில் நின்றுகொண்டு அங்கு வருபவர்களிடம் தீக்கதிரை விற்பனை செய்கிறார். இந்தப் பணியை அவர் பகல் ஒரு மணி வரை மேற்கொள்கிறார். இதன் மூலம் அவருக்கு பத்து நிரந்தர வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.

செம்மலர் ஆண்டுச் சந்தா சேர்க்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: