மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் (77)உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் புதனன்று காலமானார்.1958-59 காலகட்டத்தில் முதல்தர கிரிக்கெட்டில் தடம் பதித்த அஜித் வடேகர்,கடின உழைப்பால் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் 1966-ல் இடம்பிடித்தார்.
1966-ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அஜித் வடேகர் இந்தியாவுக்காக 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,113 ரன்கள் குவித்துள்ளார். 8 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் அஜித் வடேகர் டெஸ்ட் உலகை ஆட்டிப்படைத்தாலும் வெறும் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது ஆச்சர்யமான செய்தியாகதான் உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி மொழி,கலாச்சாரம்,பண்பாடு ஆகியற்றால் பிளவுபட்டிருந்தது.அஜித் வடேகர் குறைந்த காலமே கேப்டனாக இருந்தாலும் இந்திய அணியின் ஒற்றுமைக்கு உரமிட்டு சென்றார்.அவர் இட்ட உரம் தான் இன்று வரை இந்திய அணி செழித்துள்ளது. இந்திய அணிக்காக விளையாடிய காலகட்டத்தில் வீரர்களின் ஒற்றுமைக்காக பல்வேறு வகையில் முயற்சி செய்து வெற்றி பெற்ற அஜித் வடேகர்,”கிரிக்கெட் விளையாட்டில் உலகக்கோப்பை வெல்வதை இந்திய அணியின் கேப்டனாக இருப்பது மிகக் கடினம்” என்றார்.
அவர் கூறியது உண்மையே மொழி,கலாச்சாரம்,பண்பாடு ஆகியற்றால் இந்திய அணியில் இனப் புரிதல் இல்லாமல் பல வீரர்கள் இருந்தார்கள்.ஒரு வீரர் பேசுவது இன்னொரு வீரருக்குப் புரியாது. ஒரே மொழி பேசும் வீரர்கள் எங்குச் சென்றாலும் ஒன்றாகச் செல்வார்கள்.இதனால் அணியில் தானாக ஒரு பிரிவு ஏற்பட்டு இருந்தது.இது போன்ற பிண்ணனி உடைய பல வீரர்கள் அணியில் இருந்ததால் அனைவரையும் ஓர் அணியாக இணைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது.

அணி வீரர்களை எப்படியாவது ஒற்றுமையுடன் இருக்க அஜித் வடேகர் அணிக்குள்ளயே ஒரு குழுவை உருவாக்கி புதிய நடைமுறை ஒன்றை உருவாக்கினார்.போட்டி முடிந்த ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் அனைவரும் விடுதியில் உள்ள பாரில் சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது.பண்பாட்டின் பிளவு காரணமாக ஒவ்வொரு வீரர்களிடம் சென்று நீங்கள் பீர் அருந்துவீர்களா,லெமன் ஜூஸ் குடிப்பீர்களா என்று கேட்க முடியாது என்பதால், வாருங்கள் அனைவரும் இட்லி,தோசை சாப்பிடலாம் எனக் கூறி அனைவரையும் ஒரே உணவை சாப்பிட வைத்தார் அஜித் வடேகர்.

இந்த ஒரு நிகழ்ச்சிக்கு பின்னர் மொழி,பண்பாடு,கலாச்சாரம் போன்ற வேறுபாடு உடைய வீரர்கள்,அனைவரும் ஒன்றாக இணைந்து என்ன சாப்பிடலாம் என கலந்து பேசி தங்களுக்களே முடிவு செய்து ஒரே உணவை சாப்பிட்டு நட்பு வட்டம் போல் ஒற்றுமையானார்கள்.அஜித் வடேகர் ஓய்வு பெற்ற பின் இந்திய அணியில் திறமையான வீரர்களை உருவாக்குவதில் பிசிசிஐ-உடன் இணைத்து முக்கியப் பங்காற்றினார்.இவருடைய வழிகாட்டுதலால்தான் அசாருதீன்,கங்குலி,ட்ராவிட் போன்ற வீரர்கள் அணியில் பெயர் பெற்றனர்.தனது சீரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளால் இந்திய வீரர்களுக்கு பல்வேறு உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உணவின் மூலம் அணியின் ஒற்றுமைக்கு பாடுபட்ட அஜித் வடேகர் இன்று அமைதியாக உறங்குவதை பார்க்கும் பொழுது கண்களில் இருந்து நீர் ததும்புகிறது….!அஜித் வடேகரின் மறைவுக்கு ஐசிசி, பிசிசிஐ, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வட்டாரத்திலுள்ள பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.