ஈரோடு:
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலத் தலைவர் எஸ். நூர் முகம்மது தலைமையில் மாநில நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் உமர் காலித் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் உமர் காலித். உயர்கல்வி நிறுவனங்களை மத்திய அரசு காவிமயம் ஆக்குவதற்கு எதிராக உறுதியாகப் போராடி வருபவர். இவருக்கு எதிராகப் பல்கலைக் கழக நிர்வாகத்தைப் பயன்படுத்தித் தொடர்ச்சி
யான நெருக்கடியைப் பாஜக மத்திய  அரசு கொடுத்து வந்தார்கள். அதை யெல்லாம் மாணவர்களின் துணையோடு உமர்காலித் எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் மூன்று கொலைகாரர்கள் உமர்காலித் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கிறார்கள். இந்தத் துப்பாக்கிச் சூட்டிலிருந்து உமர்காலித் தப்பிவிட்டார். பா.ஜ.க தொடர்ந்து நடத்தி வருகிற வெறுப்பு அரசியலின் வெளிப்பாடுதான் இந்தக் கொலை வெறித்தாக்குதலாகும்.
இந்தக் கொலை வெறித்தாக்குதலை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாட்டின் அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்தக் கொலைவெறி அரசியலுக்கு எதிராகக் களம் இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

உதவித்தொகை
தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்
தொகையைப் பெறுவதற்கான விண்ணப் பத்தை தற்போது மாணவர்கள் நேரடி
யாக ஆன்லைனில் அனுப்பிவைக்கிறார் கள். மாணவர்களின் குடும்பச் சூழல், பெற்
றோர்களின் அறியாமை போன்ற பல  காரணங்களால் பல மாணவர்கள் விண்ணப்பம் அனுப்ப முடியாமல், உதவித்தொகை பெறும் வாய்ப்பை இழந்து வருகிறார்கள்.

எனவே, சிறுபான்மை மாணவர்கள் அனைவரும் தவறாமல் உதவித்தொகை பெறத்தக்க வகையில், கல்வி நிறு வனங்களே, விண்ணப்பங்களை அனுப்பும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மேற்கண்ட அறிக்கையை நலக்குழு வின் பொதுச் செயலாளர் ப.மாரிமுத்து விடுத்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.