லக்னோ;
உத்தரபிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்திற்கு உட்பட்ட பிதுனா என்னும் இடத்தில், கோவில் ஒன்று உள்ளது. புதன்கிழமையன்று இந்த கோயில் வளாகத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அங்கிருந்த 3 சாமியார்களை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த சாமியார்கள் லஜ்ஜா ராம் (65), ஹல்கே ராம் (53) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட, ராம்ஷரண் (56) என்ற மற்றொரு சாமியார் மட்டும் பலத்த காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

சாமியார்கள் படுகொலையைத் தொடர்ந்து, பிதுனா நகரில் ஒரு கும்பல் வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இஸ்லாமியர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலரின் கடைகளுக்கு தீவைத்துக் கொளுத்திய அந்தக் கும்பல், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில், கொல்லப்பட்ட ‘சாமியார்கள்’ 2 பேரின் ‘குடும்பத்துக்கு’ தலா ரூ. 5 லட்சமும், காயம் அடைந்தவருக்கு ரூ. 1 லட்சமும் நிதி உதவி அளிப்பதாக, அங்குள்ள ‘சாமியார் முதல்வர்’ ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.