காபூல்,
ஆப்கானிஸ்தானில் கல்வி அலுவலகத்தின் அருகே நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் சிக்கி 34 பேர் பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தற்கொலை படை தாக்குதல் குறித்து ஆப்கான் உள்துறை அமைச்சகம் தரப்பில், “ஆப்கன் தலைநகரம் காபூலின் மேற்குப் பகுதியில் ஷியா முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை  நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 34 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலை தொடர்ந்து அங்கு தீவிரவாதிகளுக்கு வந்திருக்கக் கூடும் என்று நினைத்து அவர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால் இறுதியில் ஒரு தீவிரவாதி மட்டுமே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.ஹ
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இந்நிலையில் இன்று காலை காபூலில் உள்ள உளவுத்துறை பயிற்சி மையம் மீது துப்பாக்கி ஏந்திய கும்பல் தாக்குதல் நடத்தியது. இதனிடையே ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும், துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பலுக்கும் மோதல் நடந்து கொண்டிருப்பதாக காபூல் போலீஸ் செய்தி தொடர்பாளர் ஹஷ்மட் ஸ்டான்க்‌ஷய் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: