தூத்துக்குடி;
“நான் துக்கத்தில் இருக்கும்போது முதன்முதலில் எனக்கு ஆறுதல் சொன்னவர்களும், துக்கத்தில் பங்கெடுத்தவர்களும் அவர்கள்தான்; அன்றைக்கு எங்களுக்கு உறுதுணை யாக இருந்தவர்கள்… இன்றைக்கு என் மகளுக்காக நினைவு ஜோதி எடுத்துச் செல்கிறார்கள்… அப்படிப் பட்ட நிகழ்ச்சிக்கு நான் எப்படி போகாமல் இருப்பேன்… அவர்கள் என்னை சாக வேண்டும் என்று சொல்லி கூப்பிட்டால் கூட நான் செல்வேன்… என்னை யாராலும் தடுக்க முடியாது…”– தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காவல்துறையினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட மாணவத் தியாகி ஸ்னோலினின் தாயார் பேசிய கம்பீரமான முழக்கம் இது.

இந்திய மாணவர் சங்கத்தின் வெள்ளிவிழா மாநில மாநாடு கோயம்புத்தூரில் ஆகஸ்ட் 18, 19 தேதிகளில் பேரெழுச்சியுடன் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக, ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளி ஸ்னோலின் நினைவாக மாணவர்  சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டக் குழு சார்பில் நினைவுச்சுடரை மாண வர்கள் எடுத்துச் செல்கிறார்கள்.

இந்த சுடர் பயண துவக்க நிகழ்ச்சிக்கு வருமாறு ஸ்னோலின் தாயாருக்கு மாண வர் சங்கத் தலைவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும் பங்கேற்றனர்.

முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது என்று ஸ்னோலின் தாயாரிடம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் நிர்ப்பந்தம் செய்திருக்கிறார்கள். “கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு, மாணவர்சங்க நிகழ்ச்சிக்கு நீங்கள் செல்லக் கூடாது; நீங்கள் மட்டும்தான் இப்படி  அவர்களது நிகழ்ச்சிக்கு செல் கிறீர்கள்; வேறு யாரும் போகவில்லை; எனவே நீங்களும் போகக்கூடாது” என்று காவல்துறையினர் நிர்ப்பந்தித் திருக்கிறார்கள்.

காவல்துறையினருக்கு பதிலடி யாக ஸ்னோலின் தாயார் கூறிய வார்த்தைகள்தான் மேற்கண்டவை. அதை அப்படியே அவர், ஸ்னோலின் நினைவுச்சுடர் புறப்படும் நிகழ்ச்சி யிலும் கூறினார். ஸ்டெர்லைட் போராளிகளின் தியாகத்தோடு தன்னை கரைத்துக் கொண்டு நீதி
மன்றங்களிலும் மக்கள் மன்றத் திலும் அந்தப் போராளிகளின் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுகிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின்
நிகழ்ச்சிகளுக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்று கம்பீரத்துடன் ஸ்னோலின் தாயார் பேசிய பேச்சு, நிகழ்ச்சியில் பங்கேற்ற வர்களை உத்வேகம் கொள்ளச்செய்தது.ஸ்டெர்லைட் போராட்ட மாணவத் தியாகி ஸ்னோலின் நினைவுச் சுடரை அவரது
தாயார் எடுத்துக் கொடுக்க இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இ.சுரேஷ் பெற்றுக்கொண் டார். சங்கத்தின் நிர்வாகிகள் விஜய்,மாரிச்செல்வம் ஆகியோர் இந்தச் சுடரை கோவை நோக்கி எடுத்துச் செல்கின்றனர். இதே நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்க புரத்திலிருந்து எடுத்துவரப்பட்ட மாணவத் தியாகி குமார் நினைவுச்சுடருக்கு வரவேற்பும் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ஜாய்சன் தலைமை ஏற்றார். மாநகரத் தலைவர் கார்த்தி, செய லாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் ஹரிஷ், தினேஸ், சுலேராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் தா.ராஜா, ஒன்றிய செயலாளர் சங்கரன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பூமயில் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

கோவையில் மாநாடு  ஆகஸ்ட் 18  துவங்குகிறது ஸ்னோலின், குமார் நினைவுச் சுடர்கள் போலவே கும்பகோணம் குழந்தைகள் நினைவுச்சுடர் உள்ளிட்ட பல்வேறு மாணவத் தியாகிகளின் நினைவுச்சுடர்கள் கோவை யில் நடைபெற உள்ள இந்திய மாண வர் சங்க மாநாட்டை நோக்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உற்சாக வரவேற்புடன் சென்று கொண்டிருக் கின்றன. இந்த சுடர்கள் ஆகஸ்ட் 18 காலை மாநாட்டில் சங்கமிக்கின்றன.
முன்னதாக ஆகஸ்ட் 17 (வெள்ளி) அன்று மாலை மாபெரும் பேரணி – பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலை யில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டிய அறிவிப்புகளைத் தொடர்ந்து, வெள்ளியன்று பேரணி – பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டி ருப்பதாக மாணவர் சங்க மாநில மாநாட்டு வரவேற்புக்குழு அறிவித் துள்ளது. ஆகஸ்ட் 18 காலை மாநாட்டு  துவக்க நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக் கான மாணவர்கள் பங்கேற்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.