அங்காரா,
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் வரியை துருக்கி அரசு உயர்த்தி உள்ளது.
அமெரிக்க பாதிரியார் ஆன்ட்ரூ பிரன்சன் துருக்கில் சிறை வைக்கப்பட்டுள்ளார். துருக்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா துருக்கி மீது பொருளாதார தடையை விதித்தது. துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு அலுமினியம் போன்ற பொருட்களுக்கு அமெரிக்க இரு மடங்கு வரி விதித்தது. இதனால் துருக்கியின் நாணயமான லிராவின் மதிப்பு பெருமளவு சரிந்துள்ளது.
இதையடுத்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியை 120 சதவீதமாகவும், மதுபானங்கள் மீதான வரியை 140 சதவீதமாகவும், புகையிலைப்பொருட்கள் மீதான வரியை 60 சதவிகிதமாகவும் துருக்கி அரசு உயர்த்தியது. மேலும் அமெரிக்காவில் இருந்து இறக்கு மதி செய்யப்படும் அரிசி, நிலக்கரி, மற்றும் அழகு சாதன பொருட்களுக்கும் துருக்கி கூடுதல் வரி விதித்துள்ளது.
அமெரிக்கா
துருக்கி பொருளாதாரத்தின் மீது தாக்குதல் நடத்தியதற்கு, பதிலடி கொடுக்கிற விதத்தில் இந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக துருக்கி துணை அதிபர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: