லக்னோ;
உத்தரப்பிரதேச மாநிலத்தை முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் மயமாக்கும் நடவடிக்கையில் அங்குள்ள பாஜக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. கட்டடங்களுக்கு காவி வண்ணம் அடிப்பது துவங்கி, கடைசியாக வாரணாசி முகல்சராய் ரயில் நிலையத்திற்கு தீனதயாள் உபத்யாயாவின் பெயரைச் சூட்டியது வரை பல விஷயங்களை, அம்மாநில அரசு செய்து வருகிறது.                                                                கான்பூர் விமான நிலையம்                                                          தற்போது புதிதாக, பரேலி, கான்பூர் மற்றும் ஆக்ரா விமான நிலையங்களின் பெயர்களை மாற்றவும், உத்தரப்பிரதேசத்தின் சாமியார் முதல்வர் ஆதித்யநாத் தீர்மானித்துள்ளார்.ஆக்ரா விமான நிலையத்திற்கு தீனதயாள் உபத்யாயாவின் பெயரையும், கான்பூர் விமான நிலையத்திற்கு சங்கர் வித்யார்த்தி பெயரையும் சூட்டுவதுடன், பரேலி நகரத்தின் பெயரை நாத் நக்ரி என்று மாற்றவும் அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

இஸ்லாமிய அடையாளத்தில் உள்ள நகரங்களின் பெயர்களை இந்து அடையாளத்திற்கு மாற்றும் வன்மம், பாஜக ஆளும் மாநிலங்களில் திட்டமிட்ட வகையில் நடந்து வருகிறது. அதனொரு பகுதியாகவே உத்தரப்பிரதேச விமான நிலையங்களின் பெயர்களை மாற்றும் விஷமத்தையும் ஆதித்யநாத் அரசு கையிலெடுத்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: