தீக்கதிர்

மீட்டுச் செல்லப்படும் கால்நடைகளின் வாகனங்கள் 15 கி.மீக்கு மேல் செல்லக்கூடாது – உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம்

டேராடூன்,
பசுக்களின் சட்டப்பூர்வமான பாதுகாவலர்கள் நாங்கள் தான் என்று உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் சோலாபூரில் கைவிடப்பட்டு சுற்றித் திரியும் மாடுகள் இறைச்சிக்காக கொல்லப்படுவதாக உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரித்த உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜீவ் சர்மா, நீதிபதி மனோஜ் குமார் திவாரி ஆகியோர் தாங்கள்தான் பசுக்கள் மற்றும் தெருவில் சுற்றித் திரியும் கால்நடைகளின் சட்டபூர்வ பாதுகாவலர்கள் எனத் தெரிவித்தனர். மேலும் மாநிலம் முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வட்டார அலுவலர்கள் தினமும் ரோந்து செல்ல வேண்டும் என்றனர்.
பொது இடங்களில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்படும் இது எல்லாவற்றிற்கும் மேலாக தெருவில் சுற்றித் திரியும் கால்நடைகளை மீட்டு ஏற்றிச் செல்லும் போது வாகனங்கள் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.