சிம்லா
இமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் 117 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அதிகபட்ச மழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சண்டிகர் – மனாலி மற்றும் சண்டிகர் -சிம்லா ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது
நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழைவெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 19 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

You must be logged in to post a comment.