தூத்துக்குடி;
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வேதாந்தா நிறுவனஅதிபர் அனில் அகர்வால் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த மே மாதம் 22 ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான ஊர்வலத்தின் போது துப்பாக்கிச் சூடு நடை பெற்றதில் 13 பேர் உயிரிழந்தனர். நுாற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல்வைக்கப்பட்டது. இந்நிலையில்

சிவகங்கையை சேர்ந்த விஜய் நிவாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார் . அதில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்த 13 பேருக்கும் தலா ஒருவருக்கு 10 கோடி ரூபாய் வீதம் 13 பேருக்கு 130 கோடி ரூபாய் நிவாரண உதவியும். ஸ்டெர்லைட் ஆலை இயங்கியதால் பாதிக்கப்பட்ட ஆலையின் அருகிலுள்ள மீளவிட்டான், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 6 கிராமங்களுக்கு 620 கோடி ரூபாய் நிவாரண உதவியும் ஆக மொத்தம் 750 கோடி வழங்க வேண்டுமென கோரியிருந்தார்.

இந்த மனு மீது திங்களன்று விசாரணை நடைபெற்றது. அப்போது இது தொடர்பாக விளக்கம் கேட்டு வேதாந்தா குழுமங்களின் அதிபர் அனில் அகர்வால் மற்றும் மத்திய,மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் இரண்டு வாரங்களுக்குள் இந்த மனு மீது சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க வேண்டுமென கூறியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.