திருப்பூர்,
பொது மக்களிடம் முதலீடு செய்த பணத்தை மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய வெல்டெக்ஸ் நிறுவனத்தின் சொத்துகள் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இயங்கி வந்த வெல்டெக்ஸ் இந்தியா எண்டர்பிரைசஸ் மற்றும் கோயம்புத்தூர் குட்வில் இந்தியா பௌல்ட்ரி பார்ம்ஸ் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்களை மோசடி செய்தது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டம், 1997-ன்கீழ் கோயம்புத்தூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பின்படி திருப்பூர் மாவட்டத்திலுள்ள மேற்படி நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் மாவட்ட வருவாய் அலுவலரால் ஆகஸ்ட் 29 அன்று காலை 11 மணியளவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.  ஏலத்தில் விற்பனை செய்ய உள்ள, மேற்படி நிறுவனங்களின் அசையா சொத்துக்களின் விபரம் வருமாறு: திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் நெழலி கிராமம் புல எண் 111/3,115/2 அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நகர் சைட் எண்: 129 முதல் 134 வரை மற்றும் 137 முதல் 140 -ல் ம.சாந்தி (கணவர் பெயர் ஊ.மணிகண்டன்) என்பவருக்கு பாத்தியப்பட்ட 13 ஆயிரத்து 520 சதுர அடிகள் மனையிடத்திற்கு நிர்ணையக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச விலை மதிப்பு ரூ.10 லட்சத்து 23 ஆயிரத்து 657 மட்டும்.அதே நெழலி கிராமம் புல எண் 90/1-ல் அதே நபருக்கு பாத்தியப்பட்ட 3.06 ஏக்கர் பூமிக்கு நிர்ணையக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச விலை மதிப்பு ரூ.35 லட்சத்து 98 ஆயிரத்து 927 மட்டும்.

அதே கிராமம் புல எண் 111/3,115/2 அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நகர் சைட் எண்,128 மற்றும் 141-ல் அவருக்கு பாத்தியப்பட்ட 5ஆயிரத்து 691 சதுர அடி மனையிடத்திற்கு நிர்ணையக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச விலை மதிப்பு ரூ.4 லட்சத்து 32 ஆயிரத்து 516 மட்டும்.திருப்பூர் தெற்கு வட்டம், கண்டியன்கோவில் கிராமம் புல எண் 922, 921, 904/1, 906/1பி, 906/2பி, 923/1, 923/1ஏ, 923/1பி, 923/1சி மற்றும் 923/1டி அமைந்துள்ள பிருந்தா கார்டன் சைட் எண் 2 ல் மணிகண்டன் மகள் பவித்ரா என்பவருக்கு பாத்தியப்பட்ட 1235 ச.அடி மனையிடத்திற்கு நிர்ணையக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச விலை மதிப்பு ரூ.55 ஆயிரத்து 700 மட்டும்.இந்த சொத்துக்களை பொது ஏலத்தில் எடுக்க விரும்புவோர், ஏல நிபந்தனைகள் தொடர்பான விபரங்களை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். இவ்விபரங்கள் அந்தந்த அலுவலக விளம்பர பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது. ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளவும், நிறுவனத்திற்கு சொந்தமான மேற்படி அசையா சொத்தினை தற்போதுள்ளவாறே ஏலம் விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் ஏலத்தில் கலந்து கொள்வது தொடர்பாக உரிய படிவத்தில் விண்ணப்பத்தினை ஆகஸ்ட் 27 அன்று மாலை 5 மணிக்குள் தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.