சென்னை:
மெரினா கடற்கரையில் இருந்து ஜெயலலிதா நினைவிடத்தை அகற்றக் கோரிய தமது வழக்கு வலுக்கட்டாயமாக தள்ளுபடி செய்யப்பட்டதாக டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

மெரீனா கடற்கரையில் உள்ள அனைத்து நினைவிடங்களையும் அகற்றி சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்திற்கு மாற்ற உத்தரவிடக் கோரி டிராபிக் ராமசாமி ஏற்கெனவே மனுதாக்கல் செய்திருந்தார்.

முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினாவில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் இடம் கோரிய அவசர வழக்கு விசாரணைக்கு வந்த போது, அங்கு கட்டுமானத்தை எதிர்த்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடியானது.

இந்த நிலையில் திங்களன்று தலைமை  நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு வழக்கு விசாரணையை தொடங்கிய போது ஆஜரான டிராபிக் ராம சாமி, ஜெயலலிதா நினைவிடம் தொடர்பான வழக்கில் தனது அனுமதி இல்லாமல் வழக்கறிஞர் செயல்பட்டதாகவும், வழக்கில் தமது மனு வலுக்கட்டாயமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் முறையிட்டார்.இந்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என அவர் கோரியதை அடுத்து, இது தொடர்பாக புதிதாக நீதித்துறை பதிவாளரிடம் புகார் மனு அளிக்க நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.