தீக்கதிர்

மோசமான வானிலையால் அமர்நாத் யாத்திரை நிறுத்தம்…..!

ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநி லத்தின் வானிலை மிக மோசமாக இருப்பதால், அமர்நாத்
புனித யாத்திரை மேற் கொள்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் மோசமான வானிலையால் நெடுஞ்சாலைப் பாதைகள்  மூடப்பட்டுள்ளன. இதனால் யாத்திரை மேற்கொண்டவர்கள் மாநி லத்தின் குளிர் தலைநகரான பகவத்நகர் பகுதியில் முகாமிட்டுள்ளனர். ஜம்முவிலிருந்து எந்தவொரு யாத்ரீகரும் குகை சன்னதிக்கு செல்ல அனுமதிக்கப்பட வில்லை. 60 நாட்கள் மேற் கொள்ளப்படும் இந்த யாத்திரை கடந்த ஜூன் 28 ஆம் தொடங்கியது. இது ரக்சா பந்தன் விழாவான ஆகஸ்ட் 26 ஆம் தேதி முடி
வடையும். கனமழை மற்றும் மிக மோசமான வானிலை நிலவினாலும் ஞாயிறன்று மாலை வரை 2,78,878 யாத்ரீகர்கள் பனி லிங்கம் குகை சன்னதியை அடைந்தனர்.