பெங்களூரு
ஒவ்வொரு மாதமும் இரண்டு செயற்கைக்கோள்களை  விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இந்தியா மற்றும் பிற நாடுகளுக்காகவும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரோவில் தலைவர் சிவன் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அந்த சந்திப்பில், “ அடுத்த ஐந்து மாதங்களில் இன்னும் 9 புதிய ராக்கெட்கள் ஏவப்பட உள்ளன.   அது மட்டுமின்றி அடுத்த மூன்று ஆண்டுகளில் 50 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.  விரைவில் பிரிட்டனின் இரு வர்த்தக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த உள்ளோம்     மாதத்துக்கு குறைந்தது இரு செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம்.
இஸ்ரோவுக்கு என பிரத்தியேக தொலைக்காட்சி சேனல் ஒன்று விரைவில் தொடங்கப்பட உள்ளது.    அந்த சேனல் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.   வரும் ஜனவரி மாதம் 3ஆம் தேதி அன்று  சந்திராயன்  விண்ணில் செலுத்தப்படும்” என சிவன் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.