இஸ்லாமாபாத்;
பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்கள் உட்பட 30 இந்தியர்கள் ஆகஸ்ட் 14 (செவ்வாய்க்கிழமை) பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

418 மீனவர்கள் உட்பட 470க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்
பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தான் அரசு அறிக்கை சமர்ப்பித்தது. இந்நிலையில் தற்போது விடுதலை செய்யப் பட்டுள்ள 27 மீனவர்களும் எல்லை  தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப் பட்டனர்.

கராச்சியில் உள்ள மாலிர் சிறையில் இருந்த இவர்கள் கன்டோன் மெண்ட்டிற்கு மாற்றப்பட்டு, பின்பு,லாகூருக்கு கொண்டு செல்லப் பட்டனர். இந்த மீனவர்கள் திங்களன்று வாகா எல்லை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அரபிக்கடல் பகுதி எல்லை யில் இந்தியா மற்றும் பாகிஸ்தானி டையே தெளிவான வரையறை இல்லாததால் மீனவர்கள் கைது செய்யப்படுவது அடிக்கடி நடக்கிறது.இப்பகுதிக்குச் செல்லும் மீனவர் களிடம் அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கான துல்லியமான தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய படகுகள் இல்லை என்பதும் ஒரு முக்கிய காரணம்.

பாகிஸ்தானின் சட்ட விதிமுறை கள் மற்றும் அவற்றின் செயல்பாடு களின் தொய்வினால், வழக்கமாக மீனவர்கள் பல மாதங்களுக்கு சிறையில் வைக்கப்பட்டிருப்பர். இந்நிலை
யில், பாகிஸ்தானில் செவ்வாய்க் கிழமை சுதந்திரம் தினம் என்பதால் 30 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள னர். இந்தியா மற்றும் பாகிஸ் தானின் அரசு மற்றும் அரசு சாரா
அமைப்புகள், கைது செய்த மீன வர்களை தாமதமின்றி விடுவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. (பிடிஐ)

Leave A Reply

%d bloggers like this: