டில்லி:
ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் நல்வாய்ப்பாக உமர் காலித் உயிர் தப்பித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜே.என்.யுவில் ஏவிபிவி மாணவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்த முன்னாள் ஜேஎன்யு மாணவரான கன்னையா குமார் போன்றவர்களிடம் இணைந்து போராட்டம் நடத்தியர் உமர் காலித்.
இவர் இன்று  நாடாளுமன்றம் அருகே உள்ள கான்ஸ்டிடியூசன் கிளப்பில் மத்திய அரசுக்கு எதிராக  நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு  ‘கவுஃப் சே ஆஸாத்’ (‘Khauff Se Azaadi’,) என்ற தலைப்பில் பேசுவதற்காக வந்துகொண்டிருந்தார். அப்போது கான்ஸ்டிடியூசன் கிளப்புக்கு வாயில் பகுதியில் அவர்மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கி சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கி சூட்டில் உமர்காலித் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். துப்பாக்கியால் சுட்ட அடையாளம் நபரை பிடிக்க முயற்சித்தபோது, அவர் துப்பாக்கியை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: