பெங்களூரு
உமர் காலித் மீது துப்பாக்கிச்சூடு
தலைநகர் தில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் களில் ஒருவரான உமர் காலித் மீது தில்லி  கான்ஸ்டிட்யூஷன் கிளப் முன்னர் துப்பாக்கிச்
சூடு நடத்தப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். துப்பாக்கியால் சுட்ட
வரும் தப்பி ஓடியுள்ளார். இந்த தாக்கு தலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

புதுதில்லி
‘செல்லதுரை நீக்கம் சரியே’
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.பி.செல்லதுரை மீது குற்ற
வியல் வழக்குகள் இருப்பதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டது சரியானதுதான் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்ந்த பதவியில் இருப்போர் மீது குற்ற
வழக்குகள் இருப்பதை நீதிமன்றம் விரும்பவில்லை. புதிய துணைவேந்தரை நியமிக்க லாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னை
கொலை மிரட்டல்?
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் ஆகியோருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக, திருப்பூரைச் சேர்ந்த தி.மு.க தொண்டர், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது முகநூலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்தும் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகி யோருக்குக் கொலை மிரட்டல் விடுத்தும் பதிவிட்டிருந்த தாக வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

திருவனந்தபுரம்
மழை நீடிக்கும்!
கேரளாவில் இன்னும் மூன்று நாள்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு
மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா, உத்தர்கண்ட், இமாச்சலப்பிர
தேசம் உள்ளிட்ட மாநிலங்க ளின் ஒரு சில பகுதிகளில் இன்னும் இரு தினங்களுக்கு
மழை நீடிக்கும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை
‘இது அவமானகரமானது!’
‘தமிழ்நாடு காவல்துறையில், உழைக்கும் மகளிர் பாதுகாப்புக்கான விஷாகா கமிட்டி இல்லை என்ற தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். காவல்துறையிலேயே பெண்களின் பாலியல் புகார்களை விசாரிக்க விஷாகா கமிட்டி இல்லை என்பது, அவமானகரமானது’ என்று திமுக எம்.பி. கனிமொழி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை
மேல்முறையீடு
ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியிலான பணிகள் மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழக அரசால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து,தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியிலான பணிகள் செய்வதற்கு மட்டும் பணியாளர்களை உள்ளே அனு மதிக்க வேண்டும் என கடந்த 9 ஆம் தேதி தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.