தஞ்சாவூர்;
மதுக்கூர் அருகே தன்பாலினச் சேர்க்கையின் போது உயிரிழந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியை எரித்துக் கொன்ற வழக்கில் பட்டதாரி இளைஞர் கைது செய்யப் பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே ஒலையக்குன்னம் கிராமத் தைச் சேர்ந்த விவசாயி அழகிரி என்பவரின் வயலில் சனிக்கிழமை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி பியாரே பெர்னாட் ராபர்ட் ரெனே(68) என்பவரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட சில பொருள்கள் அடங்கிய பை கிடந்தது. இதுகுறித்து அழகிரி அளித்த  தகவலின் பேரில் மதுக்கூர் காவல்துறை
யினர் சம்பவ இடத்துக்குச் சென்று பையைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.அதில், மதுக்கூர் அருகே ஆவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் திருமுருகன் (29) என்பவரின் முகவரி எழுதப்பட்ட துண்டு சீட்டு இருந்தது. இதையடுத்து திருமுருகனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.இதில், திருமுருகன் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2009ஆம் ஆண்டு பி.டெக்.
படித்த போது, அங்கு வந்த பிரான்ஸ்  நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி பியாரே பெர்னாட் ராபர்ட் ரெனே என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தையடுத்து, இருவருக்கிடையே தன்
பாலினச் சேர்க்கை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஆக.3ஆம் தேதி  திருச்சி வந்து அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தவரை ஆக.5ஆம் தேதி காரில் திருச்சி சென்று அவரை அழைத்துக் கொண்டு ஆவிக்கோட்டை
யில் உள்ள வீட்டுக்கு திருமுருகன் வந்துள்ளார். அங்கு இருவரும் மது அருந்தி விட்டு தன்பாலினச் சேர்க்கையில் ஈடுபட்ட போது வலிப்பு ஏற்பட்டதில் பியாரே பெர்னாட் ராபர்ட் ரெனே இறந்துள்ளார்.

இதையடுத்து அவரது சடலத்தை  வீட்டில் வைத்து டீசல், டயர் ஆகிய வற்றைக் கொண்டு எரித்து எலும்பு, சாம்பல் ஆகியவற்றை 3 மூட்டைகளில் கட்டி மதுக்கூரிலிருந்து வாட்டாக்குடி செல்லும் சாலையிலுள்ள இரட்டை புளியமரத்தடியிலும், அவருடைய பையை ஒலையக்குன்னம் கிராமத்தில் வயலில் போட்டு விட்டு சென்றதாக திருமுருகன் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ஜி.சாந்தகுமார் சம்பவ இடத்துக்குச் சென்று எலும்பு, சாம்பல் இருந்த மூட்டைகளைக் கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். சம்பவ இடத்தை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் டி.செந்தில்குமார் நேரில் பார்வையிட்டார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர்(பொ) மு.தனவேல் அளித்த புகாரின் பேரில் மதுக்கூர் காவல்துறையினர் கொலை வழக்குப் பதிந்து திருமுருகனைக் கைது செய்தனர். (ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.