ஈரோடு,
புதியதாக உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக திங்களன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிராகரிடம் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாநகராட்சியில் கடந்த நிதியாண்டில் சொத்து வரியோடு சேர்த்து குடிநீர்வரி, தொழில் வரி, பாதாள சாக்கடைக்காக டெபாசிட், தொழில் உரிமை கட்டணம் வரி, புதிய கட்டிடங்கள் கட்டினால் சொத்து வரியோடு சேர்த்து அபராத கட்டணத்தையும் கட்ட வேண்டும் என்பது போன்ற நிர்பந்தங்களால் ஏற்கெனவே கடுமையான சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். இந்நிலையில் தற்போது சொத்து வரி 100 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளோம். எனவே, தற்போது தமிழக அரசு உயர்த்தி உள்ள 100 சதவிகித சொத்துவரி உயர்வை கைவிட வேண்டும். மேலும், கடந்த நிதியாண்டில் மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படாமலேயே வசூலித்து வரும் குப்பை மற்றும் சுவர் வரியை நீக்கவேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: