சென்னை,
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவை இயக்கப் பட்டு வருகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூருக்கு முதல் மெட்ரொ ரயில் சேவை தொடங்கப்பட்டது. அதன் பின் விமான நிலையம்- சின்னமலை, ஆலந்தூர்- பரங்கிமலை, கோயம்பேடு- நேரு பூங்கா, நேருபூங்கா- சென்ட்ரல், சின்னமலை- ஏ.ஜி. டி.எம்.எஸ். ஆகியவழித் தடங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே அண்ணா சாலையில் உள்ள ஏ.ஜி. டி.எம்.எஸ்.சில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சுரங்கப் பாதையில் செல்லும் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இப்பணி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இப்பணி நிறைவடைகிறது. இதையடுத்து அண்ணாசாலை டி.எம்.எஸ்- சென்ட்ரலுக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் ஏதாவது குறைபாடு இருந்தால் அவை நிவர்த்தி செய்யப்படுகிறது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயிலை வருகிற டிசம்பர் மாதம் பயணிகளின் பயன்பாட்டுக்கு இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. டி.எம்.எஸ்.-சென்ட்ரல் இடையே சுரங்கப் பாதையில் ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ஆகிய 3 ரயில் நிலையங்கள் அமைகிறது.தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தில் 35 கிலோ மீட்டருக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 26 ரயில் நிலையங்கள் உள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.