சென்னை;
பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட உறுதியேற்கும் வகையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுவதும் மாபெரும் மனிதச் சங்கிலி இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது.

இந்த இயக்கத்தில் பங்கேற்க அனைத்து தரப்பு மக்களுக்கும் அழைப்பு விடுத்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார். அதே நேரத்தில் ஒரு குழந்தையும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறது. இது தேசத்தின் அவமானம் என்று கருதப்பட வேண்டும்.

வன்முறையற்ற வாழ்க்கை என்பது தேச வளர்ச்சியின் ஒரு குறியீடு. ஆனால் அந்த முக்கியத்துவத்துடன் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை எனும் பிரச்சனை தேசத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் இடம் பெறுவது கிடை யாது என்பது வருத்தத்திற்குரியது. பெண்களின் பிரச்சனையை சமூகத்தின் சரிபாதியினுடைய மனித உரிமைப் பிரச்சனையாக மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கருதவில்லை; இது ஜன நாயக உரிமையின் ஒரு பகுதி என்பதாக கருதுகிறது.

இப்பின்னணியில் கண்ணியமான வாழ்க்கை என்பது அனைத்து மனிதர் களுக்கும், குறிப்பாக, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கைகூட வேண்டு மென்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாகக் களம் இறங்கிப் போராடி வருகிறது. ஜூலை 3ம் தேதி சேலத்தில் பெண்கள் குழந்தைகள் மீதான

வன்முறை ஒழிப்பு மாநாட்டை எழுச்சியாக நடத்தியது. இந்தியச் சூழலில் சாதி
யும், மதமும், வர்க்கமும் இவ்வன்முறை யின் பரிமாணங்களாக இருப்பதை சுட்டிக் காட்டியது. மத்திய, மாநில அரசுகளின் நவீன தாராளமயக் கொள்கைகள் வன்முறைக்கான களம் அமைத்துக் கொண்டி ருக்கின்றன என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியது. ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டு தலில் செயல்படும் மத்திய பாஜக அரசு முன்வைக்கும் இந்துத்வா கருத்தியல் நிராகரிக்கப்பட வேண்டும் என்று சேலம் மாநாடு அறைகூவல் விடுத்தது.

சுதந்திர தினத்தில்…
சேலம் மாநாட்டைத் தொடர்ந்து, “தேசத்திற்கு விடுதலை கிடைத்தால் மட்டும் போதாது; தேசத்தின் ரத்தமும் சதையுமாக இருக்கக் கூடிய பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் வன்முறையிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும்” என்ற வலியுறுத்தலோடு ஆகஸ்ட் 15 மாலை 4 மணியளவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மனிதச் சங்கிலி இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது.

பாலின நிகர்நிலையில் நம்பிக்கை கொண்ட, ஜனநாயகம் வேண்டும் என்று நினைக்கிற, மனித உரிமைகளைப் பற்றி நிற்கிற அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும், பொதுமக்களும் இந்த மனிதச் சங்கிலியில் கரம் கோர்க்க வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

பங்கேற்கும் தலைவர்கள்
  இவ்வியக்கத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் மையங்கள் வருமாறு:கே. பாலகிருஷ்ணன் – வடசென்னை; டி.கே. ரங்கராஜன் – காஞ்சிபுரம்; பி. சம்பத்,அ. சவுந்தரராசன்; என். குணசேகரன் – தென்சென்னை; உ.வாசுகி – கடலூர்; கே. தங்கவேல் – திருப்பூர்; ப. செல்வசிங் – சேலம்; எம்.என்.எஸ். வெங்கட்டராமன் – விருதுநகர்; ஏ. லாசர் – மதுரை புறநகர்; க. கனகராஜ் – மதுரை மாநகர்; பெ. சண்முகம் – திருவள்ளூர்; மதுக்கூர் ராமலிங்கம் – ஈரோடு.

இதர மாவட்டங்களில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள், மாவட்டத் தலைவர்கள் பங்கற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: