கோவை,
திமுக தலைவர் கலைஞரின் மறைவிற்கு கோவையில் அனைத்து ஆட்டோ சங்க கூட்டுக்குழு சார்பில் அஞ்சலி மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

கோவை ராஜவீதி தேர்நிலைத் திடலில் திங்களன்று நடைபெற்ற இந்த இரங்கல் கூட்டத்திற்கு கூட்டுக்கமிட்டியின் தலைவர் பி.கே.சுகுமார் தலைமை தாங்கினார். இதில்சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் ஆர்.செல்வம், ஏபிடிஆட்டோ சங்கத் தலைவர் அன்சர் பாஷா, எம்.ராஜன், எல்பிஎப் வணங்காமுடி, ஏஐடியுசி கார்த்திகேயன், பிஎம்எஸ் வெங்கட்ராமன், எம்எல்எப் ரங்கநாதன் உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று இரங்கல் உரையாற்றினர். முன்னதாக கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: