ஒட்டாவா:
ரோஜர்ஸ் கோப்பை என அழைக்கப்டும் கனடியன் டென்னிஸ் தொடர் கனடாவின் டோராண்டோ நகரில் நடைபெற்றது. ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் கிரீஸ் நாட்டின் ஸ்டெபானோஸ் டிசிட்சிபாஸ்,உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால் முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.இரண்டாவது செட்டையும் நடால் எளிதாகக் கைப்பற்றுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிசிட்சிபாஸ் திடீரென அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த நடால் செட் புள்ளிகளைக் குவிக்க முடியாமல் திணறினார்.

டை-பிரேக்கர் வரை நீடித்த இரண்டாவது செட்டை 7-6 (7-4) என்ற புள்ளி கணக்கில் நடால் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.நடாலுக்கு இது 4-வது ரோஜர்ஸ் கோப்பை பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதர பிரிவுகளில் பட்டம் வென்றவர்கள்:

மகளிர் ஒற்றையர்
சிமோனே ஹாலேப் (ருமேனியா)

ஆடவர் இரட்டையர்
கான்டினன் (பின்லாந்து) – ஜான் பீர்ஸ் (ஆஸ்திரேலியா)

மகளிர் இரட்டையர்
ஆஸ்லிக் பார்ட்டி (ஆஸ்திரேலியா) – டெமி ஷூர்ஸ் (நெதர்லாந்து)

Leave A Reply

%d bloggers like this: