டேராடூன்:
உத்தரகண்ட் மாநிலத்தில் ஒருபோதும் மாட்டிறைச்சி விற்க விடமாட்டோம் என்று பாஜக-வைச் சேர்ந்த அம்மாநிலத்தின் முதல்வர் திரிவேந்திரா சிங் ராவத் மிரட்டியுள்ளார்.

பசுக்களின் இன உற்பத்தியை பெருக்குவது தொடர்பாக, அமெரிக்காவின் இகுனுரான் கம்பெனியானது, உத்தரகண்ட் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. அதாவது பசுக்களின் விந்துக்களை பயன்படுத்தியே இன உற்பத்தியை பெருக்குவதற்கான தொழில் நுட்பத்தை, இந்த கம்பெனி அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.இதற்காக, டேராடூனில் நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது. அப்போதுதான் திரிவேந்திர சிங் ராவத் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

உத்தரகண்ட்டில் பசுவதைக் கூடங்கள் திறக்கப்படாது, பசுவதைக் கூடங்களுக்கான உரிமங்கள் முந்தைய அரசினால் வழங்கப்பட்டிருந்தாலும் அவை ரத்து செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ள அவர், டேராடூன், ஹரித்வார், உத்தம் சிங் நகர் மாவட்டங்கள் ஆகியவற்றில் பசுக்கள் கடத்தப்படுவதைத் தடுக்கவும், பசு வதையை தடுக்கவும் போலீசாரால் சிறப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.