சென்னை

ஆளுநர் மாளிகை அதிகாரிகளுக்கு அரசியலமைப்பு படிநிலை குறித்து தெரியாதா என்று நீதிபதி ரமேஷ் கேள்வி எழுப்பினார்.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் . இதையடுத்து மும்பை உயர்நீதிமன்ற பெண் நீதிபதி தகில் ரமணி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.   இதைத்தொடர்ந்து ஞாயிறன்று தகில் ரமணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியின்போது முதல்வர், துணை முதல்வர்,  உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி உள்ளிட பல தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.   இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட நீதிபதிகளுக்கு உரிய இடம் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.   இது குறித்து நீதிபதி எஸ் கே ரமேஷ் தெவித்துள்ளதாவது
“அமைச்சர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு பின்னால்  5ஆம் வரிசையில் நீதிபதிகளுக்கு இருக்கை அளிக்கபட்டுள்ளது.  அப்படியானால் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பிறகு தான் நீதிபதிகளா?  இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அளுநர் மாளிகை அதிகாரிகளுக்கு அரசியலமைப்பு படிநிலை குறித்து தெரியாதா?” என காட்டமாக கேள்விகள் எழுப்பி உள்ளார். ஆளுநர் மாளிகையின் இந்த நடவடிக்கை நீதிபதிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.