புதுதில்லி;
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 ரூபாய் 53 காசுகளாக இருந்த நிலையில், சந்தைநேர முடிவில் அது 68 ரூபாய் 84 காசுகள் என்ற நிலைக்குச் சென்றது. இந்நிலையில், திங்கட்கிழமையன்று காலை நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, மேலும் கடுமையாக 69 ரூபாய் 62 காசுகள் என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது.

இதேபோல இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பும் கடந்த 7 மாதங்களில் இல்லாத வகையில், 402.7 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி வெளியான தகவலின்படி ஜூலை 27-ஆம் தேதி 404.19 பில்லியன் டாலர் கையிருப்பு இருந்தது. இதில் தற்போது 1.49 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அந்நிய செலாவணி கையிருப்பு 426.08 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த 4 மாதங்களாக அது படிப்படியாக குறைந்து, சுமார் 5.5 சதவிகிதம் (23.4 பில்லியன் டாலர்) வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.