கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு சத்துணவு ஊழி யர்கள் சங்கத்தின் 14வது மாநில பிரதிநிதிகள் மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் ஆண்டாள் தலைமை தாங்கினார். வரவேற்புக் குழு தலைவர் சிப. ஜெயராமன் வரவேற்றார். பொதுச் செயலாளர் முருகேசன் ஸ்தாபன வேலை அறிக்கையும், பொருளாளர் சுந்தராம்பாள் வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். மாநாட்டு வரவேற்பு குழு செயலாளர் தேவ ராஜ் நன்றி கூறினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மு.அன்பரசு மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார்.  இம்மாநாட்டில், அரசு ஊழியர்களுக்கு இணையான வரையறுக்கப்பட்ட ஊதியம் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும், பணிக்கொடை ரூ. 5 லட்சம் வழங்கவேண்டும், சத்துணவுத் திட்டத் தை அவுட்சோர்சிங் விடும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள்
மாநிலத் தலைவராக சுந்தராம்பாள், பொதுச் செயலாளராக நூர்ஜஹான், பொருளாளராக பேயத்தேவன், துணைத் தலைவர் களாக அண்ணாதுரை, பாண்டி, தமிழரசன், அமுதா, சசிகலா, மாநிலச் செயலாளர்களாக முருகேசன், பெரியசாமி, சக்தி, அய்யம்மாள், மலர் விழி, சுபந்தி, தணிக்கையாளர்களாக, விஜய குமார், ரங்கசாமி ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டனர்.முதல் முறை யாகப் பெண் ஒருவர் மாநில பொதுச்செயலாளராக தேர்வு செய்யப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.