மதுரை,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொதுத் தொழிலாளர் சங்கத்தின் 7-ஆவது மாநில மாநாடு மதுரையில் சனிக்கிழமை தொடங்கியது. சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.குமார் தலைமை வகித்தார். வேலையறிக்கையை மாநிலப் பொதுச்செயலாளர் இ.சண்முகவேலுவும், நிதிநிலையறிக்கையை மாநிலப்பொருளாளர் ஆர்.புவனேஸ்வரனும் சமர்ப்பித்தனர். இதைத் தொடர்ந்து பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது. மாநாட்டை ஞாயிறன்று சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் நிறைவு செய்து பேசினார்.

நிர்வாகிகள்; 
இந்த மாநாட்டில் மாநிலத் தலைவராக வி.குமார், துணைத் தலைவர்களாக கே.சண்முகம், பி.மாரியப்பன், மாநிலப் பொதுச் செயலாளராக ஆர்.புவனேஸ்வரன், துணைப் பொதுச் செயலாளர்களாக எஸ்.லூர்துசாபி, ஆர்.மோகன், மாநிலச் செயலாளர்களாக ஆர்.ஜார்ஜ் பெர்ணாண்டஸ், பி.மணிகண்டன், மாநிலப் பொருளாளராக எம்.ஏழுமலை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கத்தின் ஏழாவது மாநில மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாநிலப்பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.