மேட்டூர்,
இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக முழுக்கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், காவிரியில் வெள்ளம் பாய்கிறது. 9 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் காவிரிகரையோரத்தில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையோடு, விழிப்புணர்வு செய்திகளும் விடுக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலும் பள்ளிப்பாளைய த்திலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து வருவாய்த் துறையினர், காவல்துறை யினர் , தீயணைப்புத் துறையினர் ஆகியோர் பொதுமக்களை நக ராட்சி முகாம்களில் தங்கவைத்து, உணவு வசதிகளை அளித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் வரத்தால், கரையோரத்தில் உள்ள 11 மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டி ருப்பதாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் களிடம் கூறுகையில், காவிரிகரையோர மக்கள் பாது காப்பான இடங்களுக்குச் செல்லஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப் பட்டுள்ளது. சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 359 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கால்வாய் மற்றும் பிற நீர்நிலைகளில் காவிரி நீர் வெளியேறும்போது, நீச்சலடித்தல், மீன்பிடித்தல் மற்றும் இதரபொழுதுபோக்கு நடவடிக்கை களில் ஈடுபடக் கூடாது. ஆற்றங்கரையோரம் குழந்தைகள் விளையாட அனுமதிக்கக் கூடாது. கால் நடைகளை ஆற்றில் குளிப்பாட்டக் கூடாது. பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்க வேண்டும். ஆற்றின் குறுக்கே செல்லும் தரைமட்ட பாலங்களை அடையாளம் காண, எச்சரிக்கை பதாகைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: