திருப்பூர்,
பிஏபி திட்டத்தில் நல்லாறு அணை, உப்பாறு அணைக்கு நீர் கொண்டு செல்லும் பொன்னாபுரம் கால்வாய், அத்திக்கடவு அவிநாசி திட்டம் ஆகிய தேங்கிக் கிடக்கும் நீர்ப்பாசன திட்டங்களை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பேரவை கூட்டம் ஞாயிறன்று மாலை பல்லடம் விவசாயிகள் சங்கஅலுவலகத்தில் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மசூதனன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆர்.குமார் வரவேற்றார். அகில இந்திய கிசான் கவுன்சில் முடிவுகளை விளக்கி மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாநில குழு முடிவுகளை விளக்கி மாநில துணைத்தலைவர் டி.கண்ணன் ஆகியோர் உரையாற்றினர்.இக்கூட்டத்தில் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் இந்தாண்டு நல்ல மழைபெய்து திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பி கடந்த 15 நாட்களாக உபரிநீர் வெளியேறி வருகிறது.ஆனால் பிஏபி பாசன பகுதிகளில் மழையில்லாமல் அனைத்து பகுதிகளிலும் வறண்டு கிடக்கிறது. அதேசமயம் திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் மூலம் 1000 கனஅடிக்கு மேல்நீர்கொண்டுவர முடியவில்லை.

எனவே தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் நல்லாறு அணை அமைக்க வேண்டும். அமராவதி அணை நிரம்பி மூன்றுமுறை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு லட்சம் ஏக்கர் வறண்டு கிடக்கும் உப்பாறு அணை பகுதிக்கும், வட்டமலை கரை அணைக்கும் அமராவதி நீர் கொண்டு வரலாம். ஏற்கனவே 18 கோடிக்கு திட்டமிடப்பட்ட பொன்னாபுரம் வழியாக வாய்க்கால் உடனே அமைக்க வேண்டும். வெள்ள காலங்களில் நீரை சேமிக்கும் வகையில் அப்பர் அமராவதி அணை அமைக்க வேண்டும். தற்போது கீழ்பவானி அணை நிரம்பி வருகிறது. உபரிநீரை திருப்பும் வகையில் நீண்டகால கோரிக்கையான அவினாசி அத்திக்கடவு திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.விவசாய நெருக்கடி காரணமாக தனது இருகுழந்தைகள், தாயாருடன் தற்கொலை செய்து கொண்ட தாராபுரம் வட்டம், கெத்தல்ரேவ் கிராமம், வண்ணாம்பட்டியைச் சேர்ந்தமுத்துசாமியின் மனைவிசெல்வி கஷ்ட ஜீவனம் செய்து வருகிறார். இவருக்கு ரூ. 5 லட்சம்நிவாரணம் வழங்க வேண்டும். நோய் வாய்ப்பட்டுள்ள அவரது தந்தை வேலுச்சாமிக்கு ஒய்வூதியம் வழங்க வேண்டும்என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இக்கூட்டத்தில் அகில இந்திய போராட்ட நிதி ரூ.36,500 வழங்கப்பட்டது.கூட்டத்தின் முடிவில் துணைத் தலைவர் எஸ்.வெங்கடாசலம் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: